Posts

Showing posts from August, 2021

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!

Image
  சர்க்கரை நோய் என்றால் என்ன? உடலில் சர்க்கரையை கையாளும் முறையில் குறைபாடு ஏற்பட்டு அதனால் ரத்த சர்க்கரை அளவு மிகுந்து காணப்படுவதே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என கூறப்படுகிறது.   சர்க்கரை நோய் ஏன் வருகிறது? பொதுவாக சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். டைப் 1 என்பது உடலில் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படுவது (இன்சுலின் மட்டுமே தீர்வு) டைப் 2 என்பது தவறான உணவு முறை, வாழ்க்கை முறை, மரபணு குறைபாடு, உடல் பருமன் என பல காரணங்களால் வருவது, இன்சுலின் சுரக்காமல் இன்சுலின் குறைவு காரணமாக இருக்கலாம் அல்லது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (தடுப்புத்தன்மை) என்னும்   குறைப்பாட்டினால் கூட இருக்கலாம். (இனி சர்க்கரை நோய் இரண்டாம் வகை (டைப் 2) மட்டும் காண்போம்)   சர்க்கரை நோய் அறிகுறிகள் என்ன? உடல் சோர்வு, அதிக முறை சிறுநீர் வெளியேறுவது, அதிக தாகம், அதிக பசி, உடல் எடை திடீரென குறைவது, கண் பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் பொதுவாக காணலாம்.   எவ்வாறு கண்டுபிடிப்பது? சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். சாதாரணமாக   சிறுநீரில் சுகர் இருக்கக்கூடாது. இருந்தால் ரத்த பர

சர்க்கரை போதை!

Image
சர்க்கரை ஒரு இனிமையான உணவு, நமது உடல் வேலை செய்வதற்கான சக்திவாய்ந்த எரிபொருள். நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து (மாவுச்சத்து) சர்க்கரையை உறிஞ்சுவதற்கு நம் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு ஆற்றல் தேவைப்படும்போது எடுத்துக்காட்டாக வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்த இழப்பு போன்ற கடுமையான நீரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும், எனவே இது போன்ற சூழ்நிலைகளில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலுக்குத் தேவையில்லை என்றாலும் கூட நாம் ஏன் தினமும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்கிறோம்? இது போதை காரணமாக உள்ளது. ஆமாம், புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் வேறு போதை பழக்கத்தைப் போன்று, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை தவறாமல் உட்கொள்வது ஒரு போதை. நிச்சயமாக, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது  உங்கள் மூளைக்குள் ஒரு ரசாயனத்தை வெளியிடுகிறது. ஒரு நல்ல உணர்வை உருவாக்குகிறது, எனவே நீங்கள் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தைப் பெற முனைகிறீர்கள். நீங்கள் அடிமையாக இருக்கிறீர்