சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!

 


சர்க்கரை நோய் என்றால் என்ன?

உடலில் சர்க்கரையை கையாளும் முறையில் குறைபாடு ஏற்பட்டு அதனால் ரத்த சர்க்கரை அளவு மிகுந்து காணப்படுவதே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவுநோய் என கூறப்படுகிறது.

 

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

பொதுவாக சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். டைப் 1 என்பது உடலில் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படுவது (இன்சுலின் மட்டுமே தீர்வு) டைப் 2 என்பது தவறான உணவு முறை, வாழ்க்கை முறை, மரபணு குறைபாடு, உடல் பருமன் என பல காரணங்களால் வருவது, இன்சுலின் சுரக்காமல் இன்சுலின் குறைவு காரணமாக இருக்கலாம் அல்லது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (தடுப்புத்தன்மை) என்னும்  குறைப்பாட்டினால் கூட இருக்கலாம். (இனி சர்க்கரை நோய் இரண்டாம் வகை (டைப் 2) மட்டும் காண்போம்)

 

சர்க்கரை நோய் அறிகுறிகள் என்ன?

உடல் சோர்வு, அதிக முறை சிறுநீர் வெளியேறுவது, அதிக தாகம், அதிக பசி, உடல் எடை திடீரென குறைவது, கண் பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் பொதுவாக காணலாம்.

 

எவ்வாறு கண்டுபிடிப்பது?

சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். சாதாரணமாக  சிறுநீரில் சுகர் இருக்கக்கூடாது. இருந்தால் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த பரிசோதனையில் சுகர் அளவு வெறும் வயிற்றில் 126 க்கு மேல் அல்லது random சுகர் (சாப்பாடு எடுக்கப்பட்ட நேரம் கணக்கில் கொள்ளாமல்) அளவு 200க்கு மேலாக இருந்தால் அல்லது 75கி குளுக்கோஸ் வாய் வழியாக எடுத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சுகர் அளவு 200க்கு மேலாக இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம்.

 

என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் வாழ்க்கை முறை மாற்றம் செய்ய வேண்டும். முதலில் உணவு, ஆங்கிலத்தில் "garbage in garbage out" "அதாவது குப்பையை உள்ளே போட்டால் குப்பை தான் வெளியே வரும்" என்று சொல்வார்கள். அதனால் உணவு முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும். உணவில் சர்க்கரை சத்து மற்றும் மாவுச்சத்து மிகவும் குறைத்து எடுக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக சர்க்கரையை நாம் ஒழுங்காக பயன்படுத்திவிட்டால் குப்பையாக ரத்தத்தில் தங்காது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்தல் மிக அவசியம்.

உறக்கம் மற்றும் மன அமைதி - நன்றாக உறங்க வேண்டும். பெரியவர்கள்  7 மணி நேரம் சராசரியாக தூங்க வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது.

மன உளைச்சல் குறைக்க வேண்டும். ஏனெனில் மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் கோளாறு ஏற்பட்டு ரத்த சர்க்கரை ஏறும். தியானம், யோகம், விரதம் போன்றவை செய்து மன அமைதி காப்பது அவசியம்.

ரத்த அளவு ஓரளவு உயர்ந்து இருந்தால் மேலே கூறப்பட்ட மருத்துவமே போதும். ஆனால் மிக அதிக சர்க்கரை அளவு இருந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று மாத்திரை எடுக்க வேண்டி வரும்.

 

 

என்ன சாப்பிடலாம்?

காய்கறிகள் (உருளைக்கிழங்கு தவிர்த்து), புரதம் நிறைந்த உணவுகள் - தானியங்கள், முலை விட்ட தானியங்கள், கடலை, சுண்டல் மற்றும் பல, நல்ல கொழுப்பு உணவுகளை தேவையான அளவு உண்ணலாம், பழங்களில் மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை தவிர மற்ற பழங்கள் எடுக்கலாம். இயற்கையான உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும்.

 

என்ன சாப்பிட கூடாது?

சர்க்கரை - வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், கரும்பு, கருப்பட்டி போன்ற சர்க்கரை வகைகள் எடுக்க கூடாது. செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். குளிர்பானங்கள், மதுபானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை  தவிர்க்க வேண்டும். அரிசி, கோதுமை, ராகி, ரவை, மைதா போன்ற மாவுச்சத்து உணவுகளை மிகவும் குறைத்து எடுக்கவேண்டும்.

 

 

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு உண்டா?

சர்க்கரை நோய் பெரும்பாலும் தவறான வாழ்க்கை முறையால் வருகிறது. ஆகவே, சரியான வாழ்க்கை முறை கடைபிடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம் அல்லது reverse (திருப்பிப்போடலாம்) கூட செய்யலாம். உணவு முறை மாற்றம், உடல் எடை குறைத்தல், உடற்பயிற்சி செய்தல், மன அமைதியுடன் இருப்பது, நன்றாக தூங்குவது போன்றவற்றை சரியாக செய்து வந்தால் நாளடைவில் மருந்து மாத்திரை இன்றி இந்நோயை கையாள முடியும்.

 

ர்க்கரை நோய் பற்றி இலவச ஆலோசனை பெற 8122460669 என்கிற வாட்ஸஅப்ப் எண்ணுக்கு மெசேஜ் பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

சர்க்கரை போதை!