Top 5 Tamil Youtube Doctors - 5 மருத்துவர்களின் அறிவான சேனல்கள்


ஐந்து மருத்துவர்களின் அறிவான youtube சேனல்கள்!

பொதுவாக உடல்நலம் பற்றி சந்தேகம் என்றால் கூகுளை தேடுவது அல்லது youtube இல் தேடுவது இப்போ சாதாரணமா பார்க்க முடிகின்றது. ஆனால் சரியான உண்மையான தகவல் கிடைக்குமா என்றால் வாய்ப்பு மிக குறைவு தான். அதனால், நான் கடந்த சில மாதங்களாக பார்த்து வரும் டாப் 5 தமிழ் மருத்துவ சேனல்களை லிஸ்ட் போட போகிறேன் (எல்லாருமே டாப் தான்).

5. டாக்டர் சுதாகர் - குழந்தைகள் நல மருத்துவர்.

"நான் டாக்டர் சுதாகர் welcome டு மை சேனல்" என்று சொல்லிட்டு டாக்டர் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுப்பார் ஆனால் சொல்ல வந்த தகவலை நல்ல எளிமையா படங்கள் மூலமா எல்லாருக்கும் புரிய வைப்பார். இது பண்ணலாம் அது பண்ணலாம் அதுவும் பண்ணலாம் என்று குழப்பாமல் யார் யார் எது பண்ணனும் என்று கிரிஸ்டல் clear ஆகா சொல்லுவதில் வல்லவர். குழந்தைகள் நலம் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் youtube ல இவர் பெயர் போடுங்க இல்லனா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க. 

4. டாக்டர் அருண் குமார் - குழந்தைகள் நலம் மற்றும் உணவு ஸ்பெசலிஸ்ட் 

குழந்தைகள் நலம் பற்றி எளிமையாக விளக்கமாக கிராபிக்ஸ் எல்லாம் போட்டு புரிய வைப்பார். உணவு பற்றி அ முதல் அக்கன்னா வரை நல்ல நிறைய வீடியோ போட்டு இருக்காரு. எளிய நல்ல தமிழில் அழகாக மெதுவாக விளக்குவதில் வல்லவர். எடை குறைப்பது எப்படி? எந்த டயட் ரொம்ப நல்லது என்று அலசி ஆராய்ச்சி செய்து நிறைய வீடீயோஸ் upload செய்துள்ளார். குழந்தைகள் நலம், உணவு பற்றி சந்தேகங்கள் என்றால் டாக்டர் அருண்குமார் என்று youtube இல் போடுங்க. இல்லனா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

3. டாக்டர் அஸ்வின் விஜய் - எலும்பு மருத்துவர் மற்றும் ஹெல்த் expert 

பார்க்க நல்ல கம்பீரமா fit ஆகா இருப்பார். அவர் வீடீயோஸ் கூட ரொம்ப வலிமையான கருத்துக்களை கொண்டுள்ளதாக இருக்கும். மன அமைதி மற்றும் மோட்டிவேஷன் பற்றி நிறைய வீடீயோஸ் போட்டு இருக்கார். மிக பெரிய அறிய உண்மைகளை மிக குறுகிய காலத்தில் பசுமரத்தாணி போல பதியும் படி சொல்வதில் வல்லவர். உணவு, உடல் எடை, உடற்பயிற்சி என்று பல கருத்துக்கள் உள்ள வீடியோக்களை இவர் சேனலில் காண முடியும். இவரின் புன்னகையே போதும் புத்துணர்ச்சி தரும். இவரின் வீடியோ பார்க்கணும் என்றால் டாக்டர் அஸ்வின் விஜய் என்று youtube ல போடுங்க, இல்லனா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

2. டாக்டர் கார்த்திகேயன் - பொது மருத்துவர்

இவர் ஒரு மருத்துவர் என்று சொல்வதை விட ஒரு நல்ல ஆசிரியர் என்று கூறலாம். ஒரு போர்டுல எப்படி ஆசிரியர் படம் வரைந்து எளிமையாக புரிய வைப்பாரோ அதேபோல் இவர் வீடியோக்கள் இருக்கும். ஒரு டாபிக் எடுத்தால் அதனுடைய ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாத்தையும் பாமரருக்கும் எளிதாக புரியும் வகையில் பாடம் எடுப்பதில் வல்லவர். அதனால் வீடீயோஸ் கொஞ்சம் நீளமாக இருக்கும் ஆனால் கருத்துக்கள் மிக ஆழமானதாக இருக்கும். எந்த வித மருத்துவ சந்தேகம் என்றாலும் இவர் வீடீயோஸ் பார்க்கலாம். டாக்டர் கார்த்திகேயன் என்று youtube search ல போடலாம் அல்லது இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

1. டாக்டர் பால் - அமெரிக்க (தமிழ் வாழ்) மருத்துவர் - வயிறு மற்றும் குடல் ஸ்பெசலிஸ்ட் 

வேகமாக மாறி(ரி) (மழைக்காலமா இருக்கு! அதையும் சொன்னேன் ;)) வரும்  இந்த கால கட்டத்தில் எல்லாவற்றிலும் மசாலா தேவைப்படுகிறது. Edutainment என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அதாவது பொழுபோக்கு என்றும் வைத்து கொள்ளலாம் அதே நேரம் கல்வியும் கற்றுவிடலாம். மிக அறிய உயர்ந்த மருத்துவ கருத்துக்களை போகிற போக்கில் காமெடியாக எளிதாக விளக்கும் இவர் மிக வேகமாக பேசி சிரிக்க வைப்பதில் வல்லவர். வெள்ளையாக இருப்பவர் பொய் சொல்ல மாட்டாரு என்று சொல்வது போல இவர் அமெரிக்க டாக்டர் என்பதால் மட்டும் அல்ல இயல்பாகவே இவர் பொய் சொல்ல மாட்டாரு நம்ம டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் இவர் வீடீயோஸ் பார்த்து தான் கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சொல்லி இருக்காரு என்றால் பார்த்துக்கோங்க. சில நாட்களுக்கு முன் தமிழ் நாடு வந்த Dr பழனிவேல் மாணிக்கம் - (Dr பால் என்பது புனைப்பெயர்) போன இடங்களில் எல்லாம் பிரச்சனை (விருந்துக்கு போன இடத்தில் மருந்தை பற்றி பேசவது  ஜிகர்தண்டா கலோரி count பண்ணி கழுத்தறுப்பது , கோயிலில் சென்று சோசியல் டிஸ்டன்ஸ், மாஸ்க் என்று கதறுவது, தடுப்பூசி மையம் சென்று shortஸ் வீடியோ போடுவது ;) ) பண்ணதினால "நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி" னு (vacation period ஓவர் ஆயிடுச்சுங்க) யாரோ சொல்லிட்டாங்க போல அதனால திரும்ப அமெரிக்க போயிட்டாரு. இந்த மாதிரி எந்த விஷயம் சொன்னாலும் நகைச்சுவை கலந்து நாசுக்காக சொல்வதில் வல்லவர். இவர் வீடீயோஸ் பார்க்கணும் என்றால் டாக்டர் pal Tamil என்று youtube சர்ச் ல போடுங்க இல்லனா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

"யாருயா நீ உன் சேனலை எனக்கே பாக்கணும்  போல இருக்கே" என்று நீங்கள் நினைத்தால், சாரி, அப்படி ஒரு சேனல் இல்ல ஏன் என்றால் அது "நம்ம" சேனல் - Medi K - Dr K R Saravanan (Tamil) என்னும் நம் சேனலை subscribe பண்ணி வச்சுக்கோங்க. ஒண்ணா கத்துக்கலாம் ஆரோக்கியமா இருக்கலாம். (ஒரு விளம்பரம்.... ;) )

Comments

Popular posts from this blog

சர்க்கரை போதை!

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!